தமிழ்நாட்டில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று (பிப்.25) முதல் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக இன்று (பிப். 26) வேலூர் மாவட்டம் கிருஷ்ணா நகர் போக்குவரத்து பணிமனை முன்பு அதன் தொழிலாளர்கள் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'கோவிந்தா கோவிந்தா' என கோஷங்களை எழுப்பினர்.