தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி - வேலூரில் வெற்றி பெற்ற திருநங்கை

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேலூரைச் சேர்ந்த திருநங்கை கங்கா நாயக் வெற்ரி பெற்றுள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி
வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி

By

Published : Feb 22, 2022, 1:58 PM IST

Updated : Feb 22, 2022, 2:06 PM IST

வேலூர்:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல்,21 மாநகராட்சிகளுக்கும்,138 நகராட்சிகளுக்கும்,439 பேரூராட்சிகளுக்கும் கடந்த பிப்.19 அன்று நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த பிப்.19 அன்று 31,150 வாக்குச்சாவடிகளில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்தது.மொத்தம் 60.70 விழுக்காடு வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 விழுக்காடு வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக சென்னையில்,43.59 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்.22 இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் அதிக இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்காநாயக் வெற்றி பெற்றுள்ளார். திருநங்கை கங்கா 2131 வாக்குகள் கிடைத்தன.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மரியா 2116 வாக்குகள் பெற்றார். 15 ஓட்டு வித்தியாசத்தில் திருநங்கை கங்கா வெற்றியை பிடித்தார்.

இதையும் படிங்க:வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட அறையின் சாவி மாயம் - பரபரப்பு

Last Updated : Feb 22, 2022, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details