வேலூர்:ஊரக உள்ளாட்சி தேர்தலில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சே.கு. தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கையான பாண்டியம்மாள் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டு தற்போது அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் உற்சாகமாக வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கும் அவர், ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், " திருநங்கை என்பதால் எங்கு சென்றாலும் அவமதிக்கின்றனர். திருநங்கைகளுக்கான அரசாங்கத்தினுடைய எந்த ஒரு திட்டமும் சமூக நலத்துறையின் மூலமாக முறையாக எங்களுக்கு வந்து சேர்வது இல்லை.
பிரபல கட்சிகள் வாய்ப்பளிக்க மறுப்பு
அனைத்தையும் போராடிப் பெற வேண்டிய சூழல்தான் இருக்கிறது. திருநங்கை என்கிற காரணத்தினால் எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். இவையெல்லாம் எங்களை மிகவும் அவமதிப்பது போன்று உள்ளது.