தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்பாடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து.. இருளில் மூழ்கிய வேலூர்! - வேலூர் முழுவதும் மின்தடை

காட்பாடி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் சத்தத்துடன் வெடித்து தீ ஏற்பட்ட விபத்தால் வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது. பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடக்கும் நிலையில், இந்த மின்தடைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 7:10 AM IST

வேலூர்:திருவலம் அடுத்த EB கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று (மார்ச்.14) நள்ளிரவு டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதாகி பெரும் சத்தத்துடன் வெடித்தது தீ ஏற்பட்டது. இதனால், பெரிய மிட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னை, மேல்பாடி, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ மாணவிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், வேலூரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் தேர்வு எழுதும்போது இது போன்ற நிகழ்வு அரங்கேறுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புக்கு கடந்த 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு 14ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அத்தோடு, பத்தாம் வகுப்புக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டது.

இருப்பினும் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, மின்தடை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னேற்பாடுகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை செய்யக்கூடாது எனவும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்சார வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர்த் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க:ரூ.1.25 கோடி மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details