சோளிங்கரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஜெயவேல் வழக்கம்போல் இன்று பணிக்குச் செல்லும்போது சென்னை-ஜோலார்பேட்டை வழியில் சோளிங்கர்-மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு சோளிங்கர் ரயில்வே நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த ரயில்வே பணியாளர்கள் அவ்வழியாகக் கடக்கவிருந்த ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாதி வழியிலே நிறுத்தினர். பின்பு ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு விரிசலை சரி செய்தார்கள்.