வேலூர்: சோளிங்கர் மின்வாரிய அலுவலகத்தில் லயன் இன்ஸ்பெக்டராக உலகநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் காட்பாடி அடுத்த பெரியபோடி நத்தம் என்ற கிராமத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் அருகே புதிதாக மின் கம்பம் அமைப்பதற்கு, சேர்க்காடு மின்வாரிய அலுவலகத்தில் பணம் செலுத்தி உள்ளார். இதனையடுத்து நேற்றைய முன்தினம் (பிப்.9) மின்வாரிய ஊழியர்கள் உலகநாதன் வீட்டின் அருகில் மின் கம்பத்தை நட்டுள்ளனர்..
EB இன்ஸ்பெக்டரிடம் மது, பிரியாணி லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர்கள்.. வெளியான ஆடியோ! - Vellore news today
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மின்வாரிய இன்ஸ்பெக்டரிடமே மின்வாரிய ஊழியர்கள் பணம், மதுபானம் மற்றும் பிரியாணி ஆகியவற்றை லஞ்சமாக கேட்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.
EB இன்ஸ்பெக்டரிடம் மது, பிரியாணி லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர்கள்.. வெளியான ஆடியோ!
பின்னர் உலகநாதனைத் தொடர்பு கொண்ட சேர்க்காடு மின்வாரிய அலுவலக போர் மேன் மகேந்திரன் மற்றும் லைன் மேன் முருகன் ஆகியோர், மின்கம்பம் நட்டதற்கு 5,000 ரூபாய், மதுபானம் மற்றும் பிரியாணி ஆகியவற்றை லஞ்சமாகக் கேட்டுள்ளனர். தற்போது இதுதொடர்பான செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் கைது!