வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக பா.கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இன்று(மார்ச்.17) அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அம்மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்: சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பா.கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தி.மு.க வேட்பாளர் பா.கார்த்திகேயன்
இதனையடுத்து அண்ணா சாலையிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம்வரை பேரணியாகச் சென்று பா.கார்த்திகேயன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் தற்போது வேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.