வேலூரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி, அங்குள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை, அம்மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் இன்று (மார்ச் 20) ஆய்வுசெய்தனர்.
'மக்கள் பதற்றமின்றி வாக்களிக்க ஏற்பாடு’ - வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் - vellore district collector
வேலூர்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ”வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 193 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள 1,013 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.