வாணியம்பாடியில் இருந்து கடந்த மூன்று நாள்களுக்கு முன் அமைச்சர் நிலோஃபர் கபில் சென்னை சென்றார். இதையடுத்து அவருக்கு அங்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நிலோஃபர் கபில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று (ஜூலை 16) உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது அமைச்சராக இருக்கிறார் நிலோபர் கபில். இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான வாணியம்பாடியில் உள்ள இல்லம் மற்றும் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.
முன்னதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பூரண குணமடைந்துள்ளார். தற்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பி தங்கமணி ஆகியோர் கரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ZyCoV-D: மனித பரிசோதனைக்கு தயாராகும் கரோனா தடுப்பு மருந்து!