வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியாத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், "கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளது. அதன்படி நாங்கள் வெற்றிபெற்றால் மாதம் ஆறாயிரம் என வருடத்திற்கு ரூ.72,000 கொடுப்போம் என்று சொன்னார்கள். எங்கிருந்து கொடுக்க முடியும் இந்திய கஜானாவில் கூட அவ்வளவு தொகை இல்லை.
ராகுல் காந்திதான் பிரதமராக வருவார். காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று பொய் கூறி குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரை பிரித்து தன்வசமாக்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார்கள் அதுவும் நடக்கவில்லை.
கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைத்தார்கள் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து வருகின்ற 2021 பொதுத் தேர்தலிலும் நிச்சயம் அதிமுகதான் வெற்றிபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி தேர்தல் பரப்புரை