தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 1, 2021, 7:42 PM IST

ETV Bharat / state

வேட்பாளர் பட்டியலிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயர் நீக்கம்? - உயர் நீதிமன்றம்

சென்னை: ஜோலார்பேட்டை தொகுதியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைச், சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், ஜோலார்பேட்டைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், அவரது மனைவி மேகலையின் வருமான வரி கணக்கு எண்ணைத் தவறாகக் குறிப்பிட்டு உள்ளதுடன், பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகத் தேர்தல் அலுவலரிடம் மார்ச் 20ஆம் தேதி புகார் அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தன் ஆட்சேபனை மனுவை நிராகரித்துவிட்டு, அமைச்சர் வீரமணியின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே அமைச்சர் கே.சி.வீரமணியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமெனவும், தகுதியான வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து அவரை நீக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(ஏப்ரல்.01) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அதனை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனு நிராகரிப்பு, திரும்பப் பெறும் கால அவகாசம் முடிந்து, இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்டதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தேர்தல் வழக்காகத் தொடர அறிவுறுத்தி வழக்கை முடித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details