தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சுவிரட்டின்போது உயிரிழந்த காளை மாடு - பொதுமக்கள் சாலை மறியல் - tirupattur cow death

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது கிணற்றில் தவறி விழுந்து காளை மாடு உயிரிழந்தது.

பொதுமக்கள் சாலை மறியல்
பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Jan 23, 2020, 7:02 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டைப் பகுதியில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டின்போது சின்னபள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் காளை மாடு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

அதனைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய கொத்தக்கோட்டை நிர்வாகிகள் மீது வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பூபாலன் சங்கர், பழனி ஆகியோரை கைது செய்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதைக் கண்டித்து வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details