தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவு விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் - திருப்பத்தூர் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி

திருப்பத்தூர்: அகில இந்திய அளவு விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனது பாராட்டுகளைத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

tirupattur-ekalavya-model-residential-school-students-won-gold-medals-in-all-india-sports
ekalavya-model-residential-school-students-

By

Published : Dec 17, 2019, 5:22 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி இயங்கிவருகிறது.

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். அதில் இரண்டு தங்கப்பதக்கம், நான்கு வெள்ளிப்பதக்கம், நான்கு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் குத்துச்சண்டை, 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பிரிவுகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்

சாதனைப் படைத்த மாணவ மாணவிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களின் பதக்கங்களைக் காண்பித்தனர். மேலும் பல தங்கப்பதக்கங்களைப் பெற ஆட்சியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் மாணவர்களுடன் வந்திருந்தனர்.

இதையும் படியுங்க: ஜாமியா வன்முறை: குற்றப் பின்னணியுடைய 10 நபர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details