தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் கற்களால் தாக்கிக் கொண்ட இருவர் - வாணியம்பாடி குடிபோதை தகராறு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மதுபோதையில் இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

tirupattur-drunken-two-men-injured-by-pelting-stones-on-them
குடிபோதையில் கற்களால் தாக்கிக் கொண்டு இருவர் படுகாயம்!

By

Published : Feb 10, 2020, 4:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய் புதூர் என்ற இடத்தில் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கிவந்து சட்டத்திற்கு புறம்பாக விறக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த தனபால், வேலு ஆகிய இருவரும் வந்து மது வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் கற்களால் தாக்கிக் கொண்டு இருவர் படுகாயம்

இதையும் படிங்க: திருமங்கலத்தில் 8 மாத குழந்தையை விற்க முயன்ற குடிபோதை ஆசாமி!

ABOUT THE AUTHOR

...view details