தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழப்பு - திருப்பத்தூரில் சோகம் - Natrampalli Two Children Dead For Eating Pongal

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் தயாரிக்கப்பட்ட பொங்கலை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் பொங்கல் சாப்பிட 2 குழந்தைகள் பலி நாட்றம்பள்ளி பொங்கல் சாப்பிட 2 குழந்தைகள் பலி பொங்கல் சாப்பிட 2 குழந்தைகள் பலி Tirupathur Two Children Dead For Eating Pongal Natrampalli Two Children Dead For Eating Pongal Two Children Dead For Eating Pongal
Two Children Dead For Eating Pongal

By

Published : Jan 16, 2020, 2:31 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஜெயஶ்ரீ (5), தானுஶ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பொங்கலையொட்டி அவர்களது வீட்டில் சாமிக்கு பொங்கல் படையல் வைத்துபிரசாதங்களை தங்களது குழந்தைகளுக்கு தம்பதியினர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பொங்கலை சாப்பிட்ட இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்துள்ளனர். இதைக்கண்ட பெற்றோர்கள் உடனடியாக இரு குழந்தைகளையும் 108 அவசர ஊர்தி மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது மருத்துவமனையில் பரிசோதனைசெய்த மருத்துவர்கள் குழந்தைகள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பொங்கல் சாப்பிட்டு உயிரிழந்த குழந்தைகள்

இது குறித்து நாட்டறம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பொங்கல் சாப்பிட்டதால்தான் குழந்தைகள்உயிரிழந்தனரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பொங்கல் திருநாளில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

உபி.,யில் பேருந்து - டிரக் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details