வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக அவர் ரயில் மூலம் இன்று (மார்ச் 12) காட்பாடி வந்தார். அப்போது, அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பேரணியாக அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு துரைமுருகன் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீண்டும் என் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளைப் புரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறேன். பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஏற்ப கழகத்திற்கு என்னாலான பணிகளைச் செய்வேன்.
தொகுதி மக்களை பொருத்தவரையில், அவர்களுக்கு பல திட்டங்களை வைத்துள்ளேன். ஐந்து ஆண்டுக்குள் அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பேன்" என்றார்.