தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் கேனில் தவறி விழுந்த மூன்று வயதுக் குழந்தை உயிரிழப்பு - girl child death fall down water cane

வேலூர்: ஆம்பூர் அருகே தண்ணீர் கேனில் தவறி விழுந்த மூன்று வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

girl child death fall down water cane

By

Published : Nov 2, 2019, 9:57 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லபாண்டி- ரம்யா தம்பதி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண்குழந்தையான யஷ்வந்திகாவை பாட்டி விஜயாவின் பொறுப்பில் விட்டு விட்டு தம்பதி இருவரும் வேலைக்குச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை யஷ்வந்திகா வீட்டின் அருகே உள்ள துணி துவைக்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 35லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனை குழந்தை எட்டிப்பார்த்தில் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்துள்ளது.

தண்ணீர் கேனில் விழுந்து உயிரிழந்த குழந்தை

விளையாடி கொண்டிருந்த குழந்தையின் சத்தம் கேட்காததால், சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி விஜியா துணி துவைக்கும் இடத்தில் வந்துப் பார்த்த போது, தண்ணீர் கேனில் யஷ்வந்திகா தலைகீழாக விழுந்திருப்பதைக் கண்டு அலறியுள்ளார். அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஆம்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். தண்ணீர் கேனில் மூன்றுவயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் சிசுவை முட்புதரில் வீசிய கொடூரம்... உயிருடன் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details