வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில், முருகன் கோயில் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணம், சாமி அலங்கார வெள்ளிப் பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயுள்ளன.
இதில் மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கொள்ளையர்கள் சேதப்படுத்தியதோடு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.