தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணிக்குச் சென்ற இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சோகம்! - Vadacherry Village Tamil Sundar, Sandosh

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident

By

Published : Jan 24, 2020, 11:31 AM IST

வாணியம்பாடி அடுத்த வடச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ் சுந்தர், சந்தோஷ் என்பவர்களும், சின்னபள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்த வேலு ஆகிய மூவரும் மேளம் அடிக்கும் தொழில் செய்துவருகின்றனர்.

இன்று காலை இவர்கள் மூன்றுபேரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். அப்போது கிரிசமுத்திரம் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தமிழ் சுந்தர், வேலு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் சந்தோஷ் படுகாயம் அடைந்தார்.

பணிக்குச் சென்ற இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சோகம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் துறையினர், படுகாயம் அடைந்த சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

பணிக்குச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பனிமூட்டத்தால் அடுத்தடுத்து நடந்த வாகன விபத்து:10 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details