தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் தொடர் மழையினால் மூன்று பேர் உயிரிழப்பு! - வேலூரில் தொடர் மழையினால் மூன்று பேர் உயிரிழப்பு

வேலூர்: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, காட்பாடியில் உள்ள மோர்தானா அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

v
v

By

Published : Nov 8, 2021, 8:06 PM IST

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, கடலோர மாவட்டங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று (நவம்பர் 7) மாலை முதல் மிதமான மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், குட்டை, ஏரி ஆகியவை நிரம்பியுள்ளன.

மேலும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வேலூர் காட்பாடியில் உள்ள மோர்தானா அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கௌண்டன்ய ஆற்றிலும், பாலாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக இன்று (நவம்பர் 8) வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று பரவலாக 148.30 மி.மீ மழையும், அதிகப்படியாக மேல் ஆலத்தூரில் 36 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி முதல் இன்று (நவம்பர் 8) வரை பெய்த மழை காரணமாக மூன்று பேர் பலியாகியுள்ளனர். அதேபோன்று மூன்று கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மேலும் மாவட்டத்தில் ஒன்பது வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

இதுமட்டுமின்றி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் அம்மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 27 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் இருந்து ரப்பர் படகு மூலம் கைக்குழந்தை மீட்பு

ABOUT THE AUTHOR

...view details