தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் - Public hearing meeting in vellore

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில் மறுசீரமைப்பு செய்வது குறித்த கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியர் அலுவலர்கத்தில் நடைபெற்றது.

vellore local body election
vellore local body election

By

Published : Jan 12, 2020, 10:35 AM IST

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்த மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.


அதன்படி திருப்பத்தூர் ஆட்சியராக சிவனருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் பணிபுரிகின்றனர். இதனிடையே, நிர்வாக ரீதியாக புதிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பில், மறுசீரமைப்பு செய்வது குறித்து பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்


இதில், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை ஆட்சியர் பிரியதர்ஷினி, திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக இணைப்பது குறித்தும் நீக்கம் செய்வது குறித்தும் பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக பிற ஊராட்சிகளுடன் இணைக்கும்போது அதிக தூரம் செல்லக்கூடிய வகையில் இல்லாமல் குறிப்பிட்ட தொலைவில் ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.

பின்னர் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், ஊராட்சிகளை பிற ஊராட்சி ஒன்றியங்களுடன் பிரிப்பது மற்றும் இணைப்பது குறித்து ஆட்சேபனை கருத்துகளை கூட்டத்தில் வந்த அனைவரும் தெரிவிக்கலாம். இது தொடர்பாக மனு அளிக்கலாம் என்றார்.

இதையும் படிங்க: 'ஒன்றும் தெரியாதவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இப்படிதான்' - ஜெ. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details