தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் தண்ணீர் பிரச்சனையை முதலமைச்சரிடம் கூறுவேன் - ஆட்சியர் உறுதி..!

திருப்பத்தூர்: விவசாயிகள் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உறுதியளித்தார்.

Farmers' Grievances Day Meeting
Farmers' Grievances Day Meeting

By

Published : Dec 28, 2019, 11:56 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதன்பின், விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது எனவும் மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் உறுதியளித்தார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

பின்னர் விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருப்பத்தூர் கூட்டுறவு சக்கரை ஆலை பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி வாயிலாக கடன் உதவி வழங்கப் பட்டுள்ளதுடன் ஆலை வாயிலாக எத்தனால் உற்பத்தி செய்து ஆலை லாபகரத்தில் இயங்க மத்திய மாநில அரசுகள் நடைவடிக்கை எடுத்துள்ளது, அதற்கு நன்றி என கூறினர்.

இதையும் படிங்க:

'விலை இருந்தும் விற்பனை செய்ய முடியவில்லை' - மழையில் அழுகிய சின்ன வெங்காயத்தால் விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details