தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கைகுழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார் - complaint against husband

வேலூர்: திருமணமான மூன்றாம் மாதத்தில் விட்டு சென்ற கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

complient

By

Published : Sep 27, 2019, 4:31 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி(22). இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த சிரவரஞ்சனியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்தாண்டு இருவரும் வீட்டை விட்டு, வெளியேறி ஆவாரம் குப்பம் பகுதியில் உள்ள திருமால் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு அன்புமணி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவரஞ்சனி, அவரை வற்புறுத்தி திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டார்.

திருமண கோலத்தில் அன்புமணி- சிவரஞ்சனி

இந்நிலையில் மூன்று மாத கர்பிணியாக இருந்த சிவரஞ்சனியிடம், அவரது தாய் வீட்டிலிருந்து ரூ.50ஆயிரம் பணம் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அவரும் தாய் வீட்டிற்கு சென்று பணம் கேட்ட போது, ரூ. 20ஆயிரம் மட்டுமே உள்ளதாகவும், பின்னர் மீதி பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

இதை தனது கணவரான அன்புமணியிடம் தெரிவித்தற்கு, அவர் மறுப்பு தெரிவித்தார். அதனால் சிவரஞ்சனி மீண்டும் பணம் வாங்குவதற்கு தாய் வீட்டிற்கு சென்ற போது, அவர் வீட்டை விட்டு வெளியேறினார். மூன்று மாத கர்ப்பிணியாக சிவரஞ்சனியை விட்டுச்சென்ற அன்புமணி இதுவரை வராதநிலையில் தற்போது சிவரஞ்சினி 7 மாத கைக்குழந்தையுடன் உள்ளார். இதையடுத்து அன்புமணியின் பெற்றோர் கணவருக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், மிகுந்த வறுமையில் உள்ள தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சிவரஞ்சனி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:என்னடா இது ஃபேஸ் ஐடிக்கு வந்த சோதனை... இளைஞரைப் புரட்டி எடுத்த இளம்பெண்!

ABOUT THE AUTHOR

...view details