தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே மயக்க மருந்து தடவி 22 சவரன் நகை கொள்ளை! - THEFT

வேலூர்: திருப்பத்தூர் அருகே மயக்க மருந்து தூவி நூதன முறையில் 22 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

22 சவரன் கொள்ளை

By

Published : Jul 4, 2019, 1:56 PM IST

Updated : Jul 4, 2019, 2:52 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சௌடேகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன்(65). இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

அதன்பின், ராமசந்திரன் தண்ணீர் கொண்டு வந்தபோது, மர்மநபர்கள் தங்களது கைகளில் தடவி மறைத்து வைத்திருந்த மயக்க பவுடரை அவரின் முகத்தின் மீது வைத்து அமுக்கி மயக்கமடைய செய்தனர். பிறகு, வீட்டில் உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மயக்கமருந்து தூவி 22 சவரன் கொள்ளை

மயக்கம் தெளிந்த ராமசந்திரன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Jul 4, 2019, 2:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details