வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரகுபதியூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் ஆண்டுவிழாவன்று, மாணவர்களின் பெற்றோர் சார்பாக பள்ளிக்கு தேவையான பீரோ, குடங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீராக வழங்கினார்.
கிராமப்புற பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்! - கல்விச்சீர்
திருப்பத்தூர் : உடையம்முத்தூர் ஊராட்சி இரகுபதியூர் பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பாக 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கல்விச்சீராக வழங்கப்பட்டது.
கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்
இந்த பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம் என மேள தாளத்துடன் பள்ளியின் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. மாணவர்களின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கல்விச்சீர் வழங்கும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.