திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்ற பெண் அதிரடியாக கைது! - ganja sale
வேலூர்: காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று திருப்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்தவர் சோனியா. இவர் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நேற்று பெரியார் நகர் பகுதியில் மாறுவேடம் அணிந்து பெரியார் நகருக்கு கஞ்சா வாங்குவதற்கு வாடிக்கையாளர் போன்று காவல் துறையினர் சென்றனர். வாடிக்கையாளர் என்று நம்பி கஞ்சாவினை விற்பனை செய்த சோனியாவை, கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.