தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணனை கொன்று நாடகம் ஆடிய தம்பி, மைத்துனர் கைது! - Her husband's husband arrested in Tirupathur

திருப்பத்தூர்: அண்ணனை கொன்றுவிட்டு நாடகம் ஆடிய தம்பி, சகோதரியின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்ணனை கொன்றுவிட்டு நாடகம் ஆடிய தம்பி, சகோதரியின் கணவர் கைது
அண்ணனை கொன்றுவிட்டு நாடகம் ஆடிய தம்பி, சகோதரியின் கணவர் கைது

By

Published : Dec 19, 2019, 10:49 PM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அடுத்த சின்ன உடையாமுத்தூர் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு ஆண் சடலம் இருப்பதை கண்ட பொதுமக்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்று உடலை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர் விசாரணை மேற்கொண்டடதில் துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று அதிர்ச்சி தகவலுடன் துப்பு துலங்கியது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு வெங்கடராமன்(35), குமார்(23) ஆகிய இரு மகன்களும், கலைசெல்வி(22) என்ற மகளும் உள்ளனர். கலைசெல்விக்கு திருப்பத்தூரில் சிங்காரம் என்பவருடன் திருமணமாகி வசித்து வருகிறார். மூத்த மகன் வெங்கட்ராமனுக்கும் திருமணமாகி மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

வெங்கட்ராமன் எந்த வேலையும் செய்யாமல் குடித்துவிட்டு பலபேரிடம் சண்டை போடுவதையும், தாய், மனைவி, குழந்தைகளை அடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருகனின் இளைய மகன் குமார், அவரின் சகோதரன் வெங்கடராமனை அழைத்துக்கொண்டு திருப்பத்தூரில் உள்ள தங்கை கலைசெல்வி வீட்டிற்கு சென்றுள்ளார்.

தங்கையின் கணவர் சிங்காரத்துடன் சகோதரர்கள் இருவரும் இணைந்து மது அருந்த முத்தூர் பகுதி அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்றுள்ளனர். அப்போது. மதுபோதையில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட மோதலில் தம்பி குமார், தங்கையின் கணவருடன் சேர்ந்து வெங்கடராமனை அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்து கொன்று அடையாளம் தெரியாதபடி முகத்தையும் சிதைத்து அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டனர்.

அண்ணனை கொன்றுவிட்டு நாடகம் ஆடிய தம்பி, சகோதரியின் கணவர் கைது

தங்கையின் வீட்டிற்கு வந்த குமார் அண்ணன் காணாமல் போனதுபோல் நடித்துள்ளார். இதையடுத்து, கலைசெல்வி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான துப்பு துலங்கியது. அதனைத் தொடர்ந்து அண்ணனை கொலை செய்த குமார், சிங்காரத்தை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details