தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் வேலூர் மாவட்டம், மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிகபெரிய மாவட்டமாக உள்ளது. அரசாணை 279 நாள் 09.06.2013-ன் படி புதிய மாவட்டம் அமைக்க 10லட்சம் மக்கள்தொகையுடன் , 200கிராமங்களும், 2500ச.கி.மீ பரப்பளவுடன் ஐந்து வட்டங்கள் தேவை.
திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ! - advocate protest
வேலூர்: திருப்பத்தூரை தனிமாவட்டமாக பிரிக்ககோரி வழக்கறிஞர்கள் ஒருகிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
![திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3957783-209-3957783-1564177083277.jpg)
ஆனால் திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 218வருவாய் கிராமங்களும், 12இலட்சத்து 17ஆயிரத்து 362 பேர் கொண்ட மக்கள்தொகையும் உள்ளது. திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களோடு ஒரே ஒரு வட்டத்தை மட்டும் இணைத்தாலே தனி மாவட்டத்திற்கு தேவையான 2,500 ச.கி.மீ. பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்.
மேலும் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர் ,திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகிய வட்டங்களுடன் வேலூர் கோட்டத்தில் ஊத்தங்கரை அல்லது பேர்ணாம்பட் இவற்றில் ஏதாவது ஒரு வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி, இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.