வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் வாஜித். இன்று காலை எட்டு மணி அளவில் இவரது வீட்டின் சுவரில் ஏறி குதித்த இரண்டு திருடர்கள் வீட்டில் புகுந்து திருட முயன்றுள்ளனர்.
வீட்டின் சுவர் ஏறி குதித்து திருடனைப் பிடித்த பொதுமக்கள் இதனைப் பார்த்த வீட்டிலிருந்த பெண்கள் சத்தம் போட்டனர். இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் வெளியில் காவலுக்கு நின்றிருந்த ஒருவரை பொதுமக்கள் விரட்டி மடக்கிப்பிடித்தனர்.
மேலும், ஒருவர் பொதுமக்கள் வருவதை பார்த்து தப்பியோடினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி காவல் துறையினர் திருடனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் பிடிபட்டவர் கர்நாடக மாநிலம் ரைச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : திருட வந்த இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன்!