வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார் சதீஷ். இவர் தனது சகோதரன் வினோத் குடும்பத்துடன் சேர்ந்து அமாவாசை வேண்டுதல் நிறைவேற்ற நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் மலையனூர் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, பணம் கொள்ளை! - Thief stolen jewels and money at vellore
வேலூர்: குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற உணவு விடுதி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை, 45 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
பின்னர், மீண்டும் விடியற்காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் இரண்டு அறைகளிலிருந்த பீரோ உடைத்து 16 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு