தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிப்பூரைப் போல தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை-அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழங்கு பிரச்சனை இல்லை. மணிப்பூரைப் போல கலவரம் இங்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

வேலூர்
vellore

By

Published : Jul 23, 2023, 9:03 AM IST

மணிப்பூரைப் போல தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை-அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் தி.மு.க., சார்பில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க.,பொதுச்செயலாளரும், அமைச்சரமான துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கட்சி கட்டிடத்தை இரண்டு ஆண்டுகளாக முயற்சி எடுத்து கட்டி முடித்த நிர்வாகிகளை பாராட்டுகிறேன். தி.மு.க.,வின் ஆணிவேர் உள்ள ஊர்களில் கழிஞ்சூர் ஒன்றாகும். இந்த ஊரில் பெரியார், அண்ணா, கலைஞர், தளபதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என பேசாத தலைவர்களே இல்லை. இந்த ஊரில் இல்லாத அரசியல் கட்சியே கிடையாது. அரசியலில் விழிப்புணர்வு பெற்ற ஊராகும்.

என்றைக்கும் காட்பாடி தொகுதி தான் கழிஞ்சூரில் இயக்கத்தை வளர்த்த பலர் இருந்தார்கள். இப்போதும் உள்ளார்கள். தி.மு.க.,வின் பொது செயலாளராக அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன், அதற்கு அடுத்து நான் பொதுச் செயலாளராக உள்ளேன். சட்டமன்ற தேர்தலில் 13 முறை போட்டியிட்டு 11 முறை என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள்.

எப்படி நீங்கள் ஒரே தொகுதியில் இத்தனை முறை ஜெயித்தீர்கள் என்று என்னை கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்வது என்றைக்கும் என்னுடைய தொகுதி காட்பாடி தொகுதி தான். என்னை தி.மு.க., காரனாக்கியது கழிஞ்சூரை சேர்ந்த ஆசிரியர் தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தார் கலைஞர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 36 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார். தாய்குலம் என்றும் தழைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை ரூ ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தாய்மார்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. கலைஞர் பள்ளி பிள்ளைகளுக்கு மதிய உணவை 2 முட்டைகளும் வழங்கினார். மு.க ஸ்டாலின் வந்தவுடன் அவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் காலையில் மாணவர்களுடன் சிற்றுண்டி சாப்பிடுகிறார். அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் படிக்க வைக்க இலவச பஸ் பாஸ் உள்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. இந்த ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காட்பாடி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மருத்துவமனை, கல்லூரி கொண்டு வருவேன்னு சொன்னேன். அதன்படி கொண்டு வந்துள்ளேன். காட்பாடி ஏரி, கழிஞ்சூர் ஏரிகளை இணைத்து கரைகளை பலப்படுத்தி அதன் நடுவே தீவு அமைத்து அதற்கு படகு வசதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் நமக்கு வர வேண்டும். அதற்காக டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் காட்பாடி தொகுதி மக்களுக்கு என்னுடைய கடமையை செய்ய தவறுவதில்லை. தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழங்கு பிரச்சனை இல்லை. மணிப்பூரைப் போல கலவரம் இங்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. காட்பாடி தொகுதி மக்களுக்கு என்றும் சேவகனாக நான் இருப்பேன். என அவர் பேசினார்.

இதையும் படிங்க:"பெண் குடியரசு தலைவராக இருக்கும் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - மாதர் சங்கம் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details