வேலூர் மக்களவைத் தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியாத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மையங்களில் 30ஆவது வாக்குச்சாவடி மையம் உள்ளது.
வடிவேலுவின் 'சீப்பு காமெடி' போல் வேலூர் தேர்தலை நிறுத்த முயற்சி! - Theft incident
வேலூர்: வாக்குச்சாவடியில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, 11 கணினிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
![வடிவேலுவின் 'சீப்பு காமெடி' போல் வேலூர் தேர்தலை நிறுத்த முயற்சி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4036715-thumbnail-3x2-vellore.jpg)
vellore
இந்த வாக்குச் சாவடி மையம் உள்ள பள்ளி வகுப்பறையில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவையும் பள்ளியிலிருந்த 11 கணினிகளையும் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கிராம நிர்வாக பணியாளர் பள்ளியை வந்து பார்த்தபோது சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சிசிடிவி கேமரா, கணினிகள் திருட்டு
"சீப்பை திருடிவிட்டோம்... சீப்பில்லாமல் மாப்பிள்ளை எப்படி தலைவாருவாரு; எப்படி தாலி கட்டுவாரு" என்ற வைகைப்புயல் வடிவேலுவின் இங்கிலீஸ்காரன் படத்தைப் போல...'கேமராவையும் கணினியையும் திருடிவிட்டோம்; இனி எப்படி தேர்தல் நடக்கும்' என்பதைப் போல் இச்சம்பவம் உள்ளதாக வேலூர் மக்கள் நகைச்சுவையாக பேசிவருகின்றனர்.