வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (63). மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று (நவ.8) மாலை சந்திரன் மகனை அழைத்துக்கொண்டு விருதம்பட்டில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவருக்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. உடனே சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.