வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருதி பாலாற்று பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிக்கு மணல் விற்பனை செய்ய இன்று முதல் அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், ஒரு மாட்டு வண்டிக்கு 0.25 யூனிட்டுக்கு ரூ.800 கட்டணம் நிர்ணயித்ததாகவும், இந்த தொகைக்கு மணல் விலை நிர்ணயித்தால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்; ஆகவே அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் குறைத்து ரூ.250 என நிர்ணயிக்கக்கோரி சுமார் 50-க்கும் மேற்பட்ட மாண்டு வண்டி உரிமையாளர்கள், மணல் குவாரி அருகே பாலாற்றில் மாட்டு வண்டிகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் DSP திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக மனு அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கூறுகையில், 'மணல் குவாரி அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் விதித்த உத்தரவை அரசு மதிக்கவில்லை, எங்களுக்கு ரூ.105 வரை பில் போட்டு வந்த நிலையில் தற்போது ரூ.800 ஒரு வண்டிக்கு விற்கப்படும் என கூறுகிறார்கள்.