தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன! - இயந்திரங்கள் வாக்கு எண்ணும்

தேர்தல் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்

By

Published : Apr 7, 2021, 4:42 PM IST

வேலூரில் உள்ள வேலூர், காட்பாடி, கே.வி. குப்பம் (தனி), அணைக்கட்டு, குடியாத்தம் (தனி) ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்.6) தேர்தல் நடைப்பெற்றது. வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று இரவு முதல் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், இன்று (ஏப்.7) காலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை (Strong Room) மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான சண்முகசுந்தரம் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் உடன் பார்வையிட்டனர்.

பின்னர், அந்த அறைக்கு சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டார். இதையடுத்து, பாதுகாப்பு வேலூர், அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும், காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரியிலும், குடியாத்தம், கே.வி. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, இராஜ கோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்த எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வெளி அடுக்கில் தமிழ்நாடு காவல் துறையும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் துறையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மூன்றாம் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இவை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படும்.

இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 உயர்வு

ABOUT THE AUTHOR

...view details