திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ’சுஜித்’ என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் மனதில் ஒரு நீங்கா துயரமாக எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் ’சுஜித்’ என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில், உயிரிழந்த சுஜித்திற்கு பதிலாக தவறுதலாக வேலூர் மாவட்டம் வெட்டுவானம் அடுத்த கொல்லமங்கலம் பகுதியைச் சேர்ந்த முனிவேல் - சுகன்யா தம்பதியினரின் இரண்டு வயது மகன் ’நித்திஷ்’ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இதில் நித்திஷ் நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ’சுஜித்’ என்று வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.