தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரிசையில் நின்று வாக்களித்த வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர்!

வேலூர்: வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம், மக்களுடன் வரிசையில் நின்றுகொண்டு, வாக்குச் செலுத்தி தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வேலூர் ஆட்சியர்
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வேலூர் ஆட்சியர்

By

Published : Apr 6, 2021, 12:37 PM IST

வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம், வேலூர் தொகுதிக்குள்பட்ட ஆட்சியர் பங்களா அருகே, எழில் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினைச் செலுத்தினார்.

மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த வேலூர் ஆட்சியர்

அதற்கு முன்னதாக அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தபோது கரோனா வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்துகொண்ட மாவட்டத் தேர்தல் அலுவலர், அங்கு வழங்கப்பட்ட கையுறையை அணிந்துகொண்டு சரியாக காலை 8.35 மணிக்கு அவருடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

வாக்கினைச் செலுத்திய பின்னர், மற்ற வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இதையும் படிங்க: 'சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!'

ABOUT THE AUTHOR

...view details