வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் தனியார் கட்டட ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு மகன், இரட்டை மகள்கள் உள்ளனர்.
மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவரும் நிலையில் இரட்டை சகோதரிகள் பத்மபிரியா, அரிபிரியா இருவரும் காட்பாடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தனர்.
இந்நிலையில் பள்ளிகளுக்கான வகுப்பு இணையம் மூலம் தொடங்கிய நிலையில் நேற்று காலை (19.05.2020) வழக்கம்போல் சகோதரிகள் இருவரும் பள்ளி ஆசிரியர் இணைய வழியில் பாடம் நடத்துவதாகவும் கல்வி கற்பதற்காக செல்வதாகவும் கூறிவிட்டு செல்ஃபோன் ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளர்.
மாலை நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் அவரது பெற்றோர் கதவை தட்டி திறக்கக் கூறியுள்ளனர். உள்ளே எவ்வித சத்தமும் வராததால் தந்தை பாலசுப்பிரமணி கதவை உடைத்து உள்ளே சென்றார். சகோதரிகள் இருவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ந்துபோனார்.