தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!

வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!
The post office raised awareness by keeping a Post box with a helmet

By

Published : Jan 19, 2022, 8:29 PM IST

வேலூர்:2022ஆம் ஆண்டிற்கான தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் 'பாதுகாப்பான பயணத்திற்கு தலைக்கவசத்தைப் பயன்படுத்துங்கள்; விரைவான விநியோகத்திற்கு துரித அஞ்சலைப் பயன்படுத்துங்கள்' என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது.


கரோனா பரவல் காரணமாக பெரிய அளவில் இதுகுறித்தான நிகழ்ச்சி நடைபெறவில்லை.

வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரும் நிலையில், இந்த ஹெல்மெட் அணிவிக்கப்பட்டிருந்த தபால் பெட்டி என்பது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று வேலூர் மண்டல அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் பி.கோமல் குமார் தெரிவித்தார்.

தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!
சாலையில் செல்பவர்களிடம் இந்த தபால் பெட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என வேலூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி மீண்டும் மாற்றம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details