வேலூர்:வேலூர் மாவட்டம்கணியம்பாடி ஊராட்சி தலைவியாக இருப்பவர் செல்வி. கணியம்பாடி ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் ஷகிலா. ஷகிலா மற்றும் அவரது கணவர் ரவி, தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன், சாதி பெயரை கூறி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னை நாற்காலியில் உட்கார கூடாது என்றும் கீழே தரையில்தான் உட்கார வேண்டும் என்றும் இழிவாக பேசி, அவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் ஊராட்சி தலைவி செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும், சாதி பெயரை கூறி தன் மீது பழிவாங்கும் நோக்கில் செயல்படும் துணை தலைவர் மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் ஊராட்சி தலைவர் செல்வி புகார் அளித்துள்ளார்.