தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூக்கிட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்பு! - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு
தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு

By

Published : Apr 1, 2021, 10:27 PM IST

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதைப் பார்த்த அவரின் பெற்றோர் சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியின் சடலத்தை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் தாய் திட்டியதால் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிறுமியின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details