தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிக வெயில் பதிவாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் வேலூரில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வேலூர் என்றால் ஜெயில்தான் ஞாபகம் வரும். ஆனால் தற்போது வேலூரில் கடும் அனல் காற்று வீசி வருவதால், வேலூரை வெயிலூர் என்று அழைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. பகல் நேரங்களில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். காலை 9 மணிக்கெல்லாம் வெப்பக் காற்று வீசுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூரில் கடும் வெயில் - மக்கள் அவதி - 111 degrees Celsius
வேலூர்: கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே முதல் முறையாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் வெயில் 110 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை 108 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்து வந்தது. இன்று 111 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதால் புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூரில் 111 டிகிரி வெயில் பதிவாகி உள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இன்னும் ஓரிரு தினங்களில் கத்திரி வெயில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.