வேலூர் மாநகராட்சி 2ஆவது மண்டலத்திற்குட்பட்ட சத்துவாச்சாரி வீரராகவபுரத்தில் 19ஆவது வார்டில் தெருவோரம் இருந்த அடி குழாயுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அதனை சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டார்.
பின்னர் ஒரு பொறியாளர் அடங்கிய மாநகராட்சி குழு சம்பவ இடத்திற்குச்சென்று, கழிவுநீர் கால்வாயின் தடுப்புச்சுவரை உடைத்து எடுத்து அடிகுழாயை மீட்டனர். பின்னர், அடிகுழாயின் மேல்பாகத்தை எடுத்துச்சென்றனர். தற்காலிகமாக அடிகுழாய் மூடப்பட்டுள்ளது.
இதன் உயரத்தை உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து உயரத்தை உயர்த்திப் பணிகள் நடைபெறவுள்ளன.
ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து:இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஏற்கெனவே மாநகராட்சியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதை கருத்தில்கொண்டு
இதுபோன்று செயல்படக்கூடாது என ஸ்மார்ட் சிட்டிப்பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து ஒப்பந்ததாரர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை வழங்கிய பிறகும் அடி குழாயுடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த அந்த பணியின் ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள வேறு எந்தப்பணிகளையும் அவர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளேன். வேலூர் மாநகராட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
அடிகுழாயுடன் சேர்த்து போடப்பட்ட ''படா''சுவர் - கான்டிராக்டர் மீது ஆக்ஷன் எடுத்த மேயர் மேலும், இப்போது நடைபெற்று வரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் விடப்பட்ட ஒப்பந்தம் என்றும்; தகுதியில்லாத நபர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் இதுபோன்று நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:மாமூல் வேட்டையில் ஈடுபட்ட சின்ன ரவுடி - மாவுக்கட்டுடன் கைது!