வேலூர் மாவட்டம் சமீபத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்த அரசு தோட்டக்கலை பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
எனவே வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை இல்லாததால், 85 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அதிக பரப்பளவு கொண்ட தோட்டக்கலை பண்ணை, பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை தோட்டக்கலை மூலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட அகரம்சேரி கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.