தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற எருதுவிடும் விழா - The burial ceremony at Vaniyambadi

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெள்ளக் குட்டை கிராமத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.

eruthu festival
eruthu festival

By

Published : Jan 19, 2020, 8:57 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா மாநிலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர். இவ்விழாவினை வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதில், குறைந்த நொடியில் பந்தய இலக்கை தொட்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த காளை முதல் பரிசையும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பாலாஜி காளை இரண்டாவது பரிசையும், கேதாண்டபட்டி பகுதியைச் சேர்ந்த காளை மூன்றாவது பரிசையும் வென்றனர்.

வாணியம்பாடியில் எருது விடும் விழா

பெண்ணிடம் திருமண ஆசைக் காட்டி ரூ.27 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!

எருது விடும் விழாவில் காயமடைந்த மூன்று பேர் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் சிறு காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவைக் கண்டு உற்சாகமடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details