தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கள ஆய்வில் முதலமைச்சர்' வேலூர் மக்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டம்! - etv bharat tamil

வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் ஆய்விற்காக வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்கள் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடினர்.

"கள ஆய்வில் முதலமைச்சர்": வேலூர் மக்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டம்
"கள ஆய்வில் முதலமைச்சர்": வேலூர் மக்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டம்

By

Published : Feb 2, 2023, 1:31 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்கள் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டம்

வேலூர்: முதலமைச்சர் வருகையை ஒட்டி ஆட்டம் பாட்டம் என மக்கள் மேளதாளத்துடன் கொண்டாடினர். கட்சித் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் அறநிலையத்துறை மாவட்டத் தலைவர் நா.அசோகன் ஆகியோர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர் மண்டலத்துக்குப்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள், பொதுமக்களின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள், திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: வேலூரில் கள ஆய்வு.. பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details