வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் கோடியூர் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றுள்ளது.அக்கிராம மக்கள்ஆலமரத்தின் அடியில் உள்ள வேடியப்பன் சாமிக்கு ஆண்டுதோறும் பூஜை செய்து திருவிழா செய்து வருகின்றனர்.
திருப்பத்தூரில் சூறாவளி காற்று! வேரோடு சாய்ந்த பழமைவாய்ந்த ஆலமரம்
வேலூர்: திருப்பத்தூர் அருகே சூறாவளிக் காற்று வீசியதால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது.
திருப்பத்தூரில் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டுகள் பழமை ஆலமரம்
இந்நிலையில் நேற்று சிம்மண புதூர்,விஷமங்களம்,குரும்பேரிஉள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது.
அதேப் பகுதியில் சுமார்15-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.பழமையான ஆலமரம் விழுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.