தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டது.
ஒருகிணைந்த வேலூரில் ஒரேநாளில் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை - வேலூரில் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை
வேலூர்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று (ஜூன்.14) ஒரு நாளில் மட்டும் 5 கோடியே 81 லட்ச ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று (ஜூன் 14) தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனை நடைபெற்று வந்த நிலையில்,நேற்று ஒரே நாளில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் உள்ள 116 மதுபானக் கடைகளில் 3 கோடியே 41 லட்சம் ரூபாய்க்கும், ராணிப்பேட்டையில் உள்ள 88 மதுபானக் கடைகளில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் என மொத்தம் 5 கோடியே 81 லட்ச ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.