தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கள ஆய்வில் முதலமைச்சர்" - விவசாயிகள், வணிகர்கள் கோரிக்கையை நேரடியாக கேட்ட CM! - ஸ்டாலின் வேலூரில் ஆய்வு

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் வேலூரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகள், தோல் பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார்.

Tamilnadu
Tamilnadu

By

Published : Feb 2, 2023, 9:52 PM IST

வேலூர்:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டங்கள்தோறும் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வுசெய்யும் நோக்கில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(பிப்.2) கள ஆய்வை தொடங்கினார்.

வேலூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தோல்பொருள் உற்பத்தியாளர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் நிறுவன அதிபர்கள் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது, தென் பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் முன் வைத்தனர். இதேபோல் பேர்ணாம்பட்டில் அனைத்து தோல் தொழிற்சாலைகளை இணைத்து செயல்பட்டு வரும் பொது தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தோல் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து சாத்தியமானவற்றை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகியோரும் பங்கேற்றதோடு, மக்களின் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "இந்த கள ஆய்வுக்கூட்டம் குறைகளை கண்டுபிடிப்பதற்காக அல்ல, மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். சுணக்கமாக உள்ள சில பணிகள் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 20 மாத காலத்தில் எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இதற்கெல்லாம் உங்களுடைய ஒத்துழைப்புதான் காரணம், அதற்காக நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details