தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வேலூரில் பள்ளிளுக்கு விடுமுறை - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் (பிப்.19) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

பள்ளிளுக்கு விடுமுறை
பள்ளிளுக்கு விடுமுறை

By

Published : Feb 18, 2022, 8:09 AM IST

வேலூர்: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஓடுக்கத்தூர், திருவலம், பென்னாத்தூர் மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 18ஆம் தேதி (இன்று) விடுமுறை அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 19 ஆம் தேதி (நாளை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இலவசமாக 30 மாணவர்களுக்கு கல்வி - அதிமுக வேட்பாளார் வாக்குறுதி

ABOUT THE AUTHOR

...view details